இந்தியன்-2 திரைப்படத்தை எடுக்க அரசியலே காரணம் என மக்கள் நீதி மய்யம் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
சென்னை வடபழனியில் உள்ள தனியார் மாலில் இந்தியன்-2 திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் நடிகர் கமலஹாசன், இயக்குநர் சங்கர் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர். விழாவில் பேசிய கமல்ஹாசன், இந்தியன் திரைப்படம் இன்றுவரை மக்களிடையே பேசப்படுவதாக தெரிவித்தார்.
இந்தியன் படத்தில் நடித்தது தமக்கு கிடைத்த வாய்ப்பு என்றும், இது அனைவருக்கும் எளிதில் கிடைத்துவிடாது என்றும் அவர் கூறினார். இந்தியன்-2 திரைப்படத்தை எடுக்க அரசியல் வழிவகுத்ததாக கூறிய அவர், இன்னும் நாட்டில் ஊழல் அப்படியேத்தான் உள்ளதாக தெரிவித்தார்.
6 ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்ட இந்தியன்-2 திரைப்படம் கொரோனா உள்ளிட்ட காரணங்களால் தாமதமானதாக தெரிவித்தார். தங்களை தூக்கி சுமந்த தயாரிப்பு நிறுவனத்திற்கும் கமல்ஹாசன் நன்றி தெரிவித்தார்.