நீதிமன்ற வழக்குகளால் அரசு வேலை கிடைக்காமல் பாதிக்கப்பட்டுள்ள செவிலியர்கள், ஆசிரியர்களை தமிழக அரசு கவனத்தில் கொண்டு சரி செய்ய வேண்டும் என பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் வலியுறுத்தியுள்ளார்.
சட்டப்பேரவையில் வேலைவாய்ப்பு தொடர்பாக 110 விதியின் கீழ் புதிய அறிவிப்பை வெளியிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் நன்றி தெரிவித்தார்.
தொடர்ந்து பேரவையில் பேசிய அவர், நாட்டில் உள்ள இளைஞர்கள் வெறுமனே பட்டம் வாங்குபவர்களாக மட்டும் இருக்கக்கூடாது என்பதற்குதான், பிரதமர் மோடி, முதல்முறையாக திறன் மேம்பாட்டுத்துறை என்று தனியாக கொண்டு வந்தார் என தெரிவித்தார்.
அதேபோல தமிழகத்தில், அரசு பணிகளில் கவனம் செலுத்தி இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பை கொடுக்க வேண்டும் என்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் எண்ணம் சரியானது எனவும் வானதி சீனிவாசன் கூறினார்.