நெருக்கடி நிலை குறித்து பள்ளிப் பாடத் திட்டத்தில் சேர்க்க வேண்டும் என முன்னாள் குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு வலியுறுத்தியுள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்திய ஜனநாயகத்தின் மீது நீங்காத கறையை நெருக்கடி நிலை ஏற்படுத்திவிட்டதாக வேதனை தெரிவித்தார்.
மேலும், நெருக்கடி நிலை எவ்வாறு நடைமுறைப்படுத்தப்பட்டது என்பது குறித்தும், லட்சக்கணக்கானோர் கைது செய்யப்பட்டது குறித்தும் மாணவர்கள் அறிந்துகொள்வது அவசியம் என்றும் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.