பிரதமர் மோடி ஜூலை மாதம் ரஷ்யா செல்லவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரஷ்ய அதிபராக தொடர்ந்து ஐந்தாவது முறையாக புதின் கடந்த மே மாதம் தேரந்தெடுக்கப்பட்டார்.
இதேபோல இந்திய பிரதமராக மோடி தொடர்ந்து மூன்றாவது முறையாக அண்மையில் பதவியேற்றார்.
இந்தச் சூழலில், ரஷ்யா விடுத்த அழைப்பை ஏற்று அடுத்த மாதம் பிரதமர் மோடி மாஸ்கோ செல்லவிருப்பதாக ரஷ்ய அதிபர் மாளிகை அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது.
உக்ரைன், ரஷ்யா போர் தொடங்கிய பின்னர், பிரதமர் மோடி ரஷ்யா செல்வது இதுவே முதல்முறையாகும்.