டெல்லியில் பிரதமர் மோடியை முன்னாள் குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
மோடி தொடர்ந்து 3-ஆவது முறையாக பிரதமராக பதவியேற்ற நிலையில், அவரை வெங்கையா நாயுடு சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.
பின்னர் வெங்கையா நாயுடு தனது எக்ஸ் வலைதள பக்கத்தில், இந்தச் சந்திப்பின்போது தேச நலன் கருதி பல்வேறு விவகாரங்கள் குறித்து தாங்கள் ஆலோசனை நடத்தியதாக கூறியுள்ளார்.
மேலும், பிரதமர் மோடியின் தலைமையின்கீழ் பாரதம் புதிய உயரத்தை எட்டும் என்றும் அந்தப் பதிவில் வெங்கையா நாயுடு குறிப்பிட்டுள்ளார்.