புதுச்சேரியில் சாலையில் நடந்துசென்ற 3 பேர் மீது அதிவேகமாக வந்த இருசக்கர வாகனம் மோதிய சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
புதுச்சேரி மாநிலம் மேட்டுப்பாளையத்தில் சாலையோர கடை ஒன்றில் ராமநாதன் மற்றும் அவரது மனைவி கோமதி ஆகியோர் பானிப்பூரி சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.
அதேபோல குருவேந்தன் என்ற இளைஞரும் அந்த வழியாக நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக வேகமாக வந்த இருசக்கர வாகனம் ஒன்று 3 பேர் மீதும் பலமாக மோதியது.
இந்த விபத்தில் இருசக்கர வாகன ஓட்டுநர் உள்பட 4 பேரும் படுகாயம் அடைந்தனர். இதுதொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.