மயிலாடுதுறை மாவட்டம் கொண்டல் அருகே லாரி மீது அரசு பேருந்து மோதியதில் 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
முடிகண்டநல்லூரில் இருந்து மயிலாடுதுறை நோக்கி 30-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது.
கொற்கை அருகே சென்ற போது கட்டுப்பாட்டை இழந்த அரசு பேருந்து எதிரே வந்த லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில், சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.