நாமக்கல் மாவட்டத்தில் சிப்காட் திட்டத்தை எதிர்த்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை போலீசார் கைது செய்தனர்.
நாமக்கல் மாவட்டம் வளையபட்டி, அரூர், பரளி உள்ளிட்ட கிராமங்களில் சுமார் 820 ஏக்கர் பரப்பளவில் சிப்காட் அமைக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்தது.
அதனைத்தொடர்ந்து நிலம் கையகப்படுத்தும் பணியில் மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது.
இத்திட்டம் செயல்படுத்தப்பட்டால் விவசாய நிலம் பாதிக்கப்படும் எனக்கூறி விவசாயிகள் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் சிப்காட் திட்டத்தை கைவிடக்கோரி பூங்கா சாலையில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்திய விவசாயிகளை போலீசார் கைது செய்தனர்.