மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கரை குவைத் தூதர் மெஷல் முஸ்தபா ஜாசிம் அல்ஷேமாலி இன்று மரியாதை நிமித்தமாக டெல்லியில் சந்தித்தார்.
இது குறித்து வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கர் தனது ட்விட்டர் பதிவில்,
“குவைத்தின் தூதர் மெஷல் முஸ்தபா ஜாசிம் அல்ஷேமாலியை இன்று மதியம் வரவேற்பதில் மகிழ்ச்சி.
இந்திய சமூகத்தின் நலன்கள் மற்றும் குவைத்தில் உள்ள இந்தியத் தொழிலாளர்களின் நலன்கள் குறித்தும், இருதரப்பு உறவுகள் குறித்தும் விவாதித்தோம்.
வெற்றிகரமான பதவிக்காலத்திற்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்தேன் எனத் தெரிவித்துள்ளார்.