ஹைதராபாத் எம்.பி.யும், மஜ்லிஸ் கட்சித் தலைவருமான ஒவைசி, மக்களவை உறுப்பினராக பதவியேற்றபோது ஜெய் பாலஸ்தீனம் என்று முழக்கமிட்டது விவாதத்துக்கு வழிவகுத்துள்ளது.
மக்களவை உறுப்பினராக பதவியேற்ற ஒவைசி, ‘ஜெய்பீம்’, ‘ஜெய் தெலங்கானா’, ‘ஜெய் பாலஸ்தீனம்’ என்று முழக்கமிட்டார். இஸ்ரேல், பாலஸ்தீனம் இடையே போர் நடைபெற்று வரும் நிலையில், ஒவைசியின் இந்த முழக்கம் விவாதத்துக்கு வித்திட்டுள்ளது.
மேலும், எம்.பி.க்கள் பதவியேற்கும்போது இன்னொரு நாட்டை புகழ்வது சரிதானா என நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாலஸ்தீனம் உள்ளிட்ட நாடுகளுடன் நமக்கு பிரச்சினை இல்லை என்றாலும், பதவியேற்பின்போது இன்னொரு நாட்டை புகழ்வதற்கு விதிமுறைகள் அனுமதிக்கிறதா என்பதை ஆராய வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.