தென்காசி மாவட்டம், சங்கரன்கோவிலில் மழை நீர் உள்ளே புகாமல் இருக்க பேனரால் மூடியபடி அரசுப்பேருந்தை இயக்கிய அவலம் அரங்கேறியுள்ளது.
சங்கரன்கோவில் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் இருந்து ராயகிரி நோக்கி அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது.
இந்த பேருந்தின் உள்ளே மழைநீர் புகாமல் இருக்க, சுப நிகழ்ச்சிகளின் விளம்பரத்திற்காக பயன்படுத்தும் பேனரைக் கொண்டு பேருந்தின் மேற்கூரையை மூடி இயக்கப்பட்டுள்ளது.
இதனால் பேருந்தின் பின்னே வரும் வாகனங்கள் விபத்தில் சிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவேபோக்குவரத்துக் கழகம் சம்பந்தப்பட்ட பேருந்தில் முறையாக பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.