கென்யாவில் அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவின் சகோதரி அவுமா ஒபாமா மீது போலீஸார் கண்ணீர் புகைக் குண்டை வீசினர்.
கென்யா தலைநகர் நைரோபியில், கூடுதல் வரிவிதிக்கும் நிதி மசோதாவை கண்டித்து பொதுமக்கள் தன்னெழுச்சியாக போராட்டம் நடத்தினர்.
இதில் ஒபாமா சகோதரி அவுமா ஒபாமாவும் பங்கேற்றார். அப்போது போராட்டக்காரர்களை கலைக்க போலீஸார் கண்ணீர் புகை குண்டுகளை பயன்படுத்தியதால், அவுமா ஒபாமா பாதிக்கப்பட்டார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், போராட்டத்தைப் பார்வையிட சென்றபோது, போலீஸாரின் தாக்குதலுக்கு தாம் ஆளாக நேர்ந்ததாக தெரிவித்தார்.