டி-20 உலகக்கோப்பை தொடரில் ஆஸ்திரேலியாவின் அரையிறுதி கனவை தகர்த்த ஆப்கனிஸ்தான் அணியின் வெற்றியை அந்நாட்டு ரசிகர்கள் உற்சாக கொண்டாடி வருகின்றனர். இது சாத்தியமானது எப்படி? என்பது பற்றி பார்க்கலாம்.
ஏதோ பத்து பேர அடிச்சு டான் ஆனவன் நான் இல்ல டா, நா அடிச்ச 10 பேருமே டான் தான்….
ஆப்கானிஸ்தான் ஆஸ்திரேலியா அணியை வீழ்த்திய தருணம்….
இந்த ஆண்டின் ஜூன் 22ம் தேதி உலக கிரிக்கெட்டில் இனி அழிக்க முடியாத இடத்தை பிடித்திருக்கும். ஏனென்றால் கிரிக்கெட்டில் முடிசூடா மன்னர்களாக வலம் வந்துகொண்டு இருக்கும் கங்காருக்களான ஆஸ்திரேலிய அணியை, உலகக் கோப்பை டி20 கிரிக்கெட் தொடரின் லீக் ஆட்டத்தில் சிதைத்து விட்டது ஆப்கானிஸ்தான்….
அந்த வெற்றியின் மூலம் நடப்பு ஆண்டின் உலகக் கோப்பை டி20 கிரிக்கெட் அரையிறுதிக்கு முன்னேறும் பொன்னான வாய்ப்பை தக்கவைத்துக்கொண்ட ஆப்கானிஸ்தான். உலக டெஸ்ட் சாம்பியன் மற்றும் ஒருநாள் உலகக் கோப்பை சாம்பியன் பட்டம் வென்ற ஆஸ்திரேலிய அணியின் உலகக் கோப்பை பந்தயத்தை தடம் மாற செய்தது.
இது ஒரு பழிக்கு பழி போட்டியாக தான் பார்க்கப்பட்டது. ஏனெனில் 2023 உலகக் கோப்பை தொடரில், ஆஸ்திரேலியா அணியின் வாழ்வா, சாவா ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அவர்களை அவ்வளவு எளிதாக வெற்றி பெற செய்துவிடவில்லை… கிளென் மேக்ஸ்வெல் எனும் அதிரடி ஆட்டக்காரால் மட்டுமே ஆஸ்திரேலியா அணி உயிர் பெற்று இறுதிப் போட்டி வரை வந்து, இந்தியாவை, இந்திய மண்ணிலேயே வீழ்த்தி கோப்பையை தட்டிச் சென்றது.
பெரிய அணிகளுக்கு பயம் காட்டி வருக் சோட்டா அணியான ஆப்கானிஸ்தானின் ஒவ்வொரு வீரருக்குள்ளும் ஒரு மாஸ்டர் கிளாஸ் கிரிக்கெட்டர் இருக்கிறார் என்பதை அவ்வபோது உணர்த்தும் வகையிலேயே ஆப்கான் அணியின் போட்டிகள் உலக அளவில் கவனம் பெற்றுள்ளன. தற்போது நடப்பு டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் சூப்பர் 8 சுற்றில் ஆஸ்திரேலியா மற்றும் வங்கதேசத்தை வீழ்த்தி, அரையிறுதிக்கு கால் அடி எடுத்து வைத்து மேலும் ஒரு வரலாற்று சம்பவத்திற்காக காத்துக்கொண்டு இருக்கிறது ஆப்கானிஸ்தான்…
இந்த வெற்றியை கொண்டாடும் விதமாக ஆப்கானிஸ்தானின் முக்கிய நகரங்களில், அந்நாட்டு மக்கள் சாலைகளில் இறங்கி தங்கள் மகிழ்ச்சி அள்ளி தெளித்து வருகிறார்கள்.
2011 உலகக் கோப்பை வென்ற இந்திய அணியினர், சச்சின் டெண்டுல்கரை எப்படி தோளில் தூக்கிகொண்டு கொண்டாடினார்களோ, அதே போல வங்கதேசத்தை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்ற மகிழ்ச்சியில், பயிற்சியாளர் ஜோனதன் டிராட் ஐ தோளில் தூக்கி வைத்துக்கொண்டு கொண்டாடியது ஆப்கானிஸ்தான்… இந்த உற்சாகமான தருணத்தை உலக கிரிக்கெட் ரசிகர்களும் கொண்டாடி வருகிறார்கள், மேலும் இந்த தொடர் முடிந்தபிறகு, வீரர்களுக்கு ராஜ வரவேற்பு கொடுப்பதற்காக காத்துக்கொண்டிருக்கின்றார்கள் ஆப்கானிஸ்தான் ரசிகர்கள்…..
இந்த தருணத்தை எப்படி வர்ணிக்க தோன்றுகிறது தெரியுமா?
1983 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில், இந்திய அணி விளையாட சென்ற போது, இந்திய அணியை பொடியர்களாக எண்ணி நகையாடிய போது இந்திய கேப்டன் கபில் தேவ்…. நீங்கள் இங்கே எதற்காக வந்துள்ளீர்கள் என்ற பலரின் கேள்விக்கு,
நாங்கள் இங்கே வெற்றி பெற வந்திருக்கிறோம்.. வேற எதற்காக வந்திருக்கிறோம்? என பேசியிருப்பார். அதே பாணியில் தான் 20 அணிகள் பங்கேற்றுள்ள நடப்பாண்டு டி20 உலகக் கோப்பை தொடரில் கடைசி 4 அணிகள் வரையிலான திரில்லான பயணத்தை மேற்கொண்டுள்ளது ஆப்கானிஸ்தான்…
ஒரு பக்கம் தாலிபான்கள் ஆக்கிரமிப்பு, மறுபக்கம் மைதானங்களில் பயிற்சி மேற்கொள்ள கூட சரியான சூழல் இல்லை. இவைகளெல்லாம் கடந்தும் விடா முயற்சியால் கடந்த உலகக் கோப்பை தொடரில் சிறப்பான பல வெற்றிகளை பெற்று, சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கு தகுதி பெற்றது ஆப்கனிஸ்தான் அணி. இந்த முறை டி20 உலகக் கோப்பையில், வரலாற்றிலேயே தனது முதல் அரையிறுதியில் காலடி எடுத்து வைத்துள்ளது இந்த சோட்டா அணி….
இந்த முறை இதுவரை பார்த்திராத ஆப்கான் அணியை இறுதி யுத்தத்தில் எதிர்பார்த்து காத்துக்கொண்டு இருக்கிறது கிரிக்கெட் உலகம்….