புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே தனியார் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது.
தொண்டியிலிருந்து அறந்தாங்கி நோக்கி 30-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் தனியார் பேருந்து சென்று கொண்டிருந்தது. தீயத்தூர் பகுதியில் வந்தபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது.
இந்த விபத்தில் காயமடைந்த பயணிகள் சிகிச்சைக்காக அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.