கடலூரில் 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி செவிலியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு அரசு சுகாதாரத்துறை அனைத்து பெண் அலுவலர் சங்கம் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், மருத்துவமனையில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும், என்பது உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர்.
இதையடுத்து, கோரிக்கை மனுவை மாவட்ட ஆட்சியரிடம் செவிலியர்கள் நேரில் வழங்கினர்.