திருச்சி காவிரி ஆற்றில் சுற்றித்திரியும் முதலைகளை வனத்துறையினர் பிடிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருச்சி காவிரி பாலம் மற்றும் ஸ்ரீ ரங்கம் அம்மா மண்டபம் பகுதியில் காவிரி கரையில் முதலை நடமாட்டம் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் அச்சமடைந்த பொதுமக்கள், அசம்பாவிதம் நடப்பதற்கு முன் முதலைகளை பிடிக்க வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.