தமிழகத்தில் வெளி மாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகளை இயக்கக்கூடாது என தமிழக அரசு பிறப்பித்த உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
தமிழக அரசின் உத்தரவை எதிர்த்து தனியார் பேருந்து உரிமையாளர்கள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த மனு நீதிபதி பி.வி.நாகரத்னா தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தனியார் பேருந்து உரிமையாளர்கள் தொடர்ந்த மனு மீது பதிலளிக்க தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.