புதுச்சேரி மாநிலம், காரைக்காலில் சிறுவன் மீது சூடான கஞ்சியை ஊற்றிய பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.
காரைக்கால் இந்திரா நகரை சேர்ந்த நதியா என்பவருக்கும், அவரது பக்கத்து வீட்டில் வசிக்கும் ராஜமேரி என்பவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில் கடந்த 16-ம் தேதி நதியா தனது இட்லிக் கடையில் மகனுடன் வியாபாரத்தை கவனித்துக் கொண்டிருந்துள்ளார்.
அப்போது அங்கு வந்த ராஜமேரி, சூடான கஞ்சியை சிறுவன் மீது ஊற்றியுள்ளார். இதில் படுகாயமடைந்த சிறுவன் சிகிச்சைக்காக காரைக்கால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதுதொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியான நிலையில் ராஜமேரியை போலீசார் தேடி வருகின்றனர்.