போஸ்னியா ஹெர்ஸிகோவினாவில் அமைந்துள்ள செங்குத்து பள்ளத்தாக்கின் நடுவே ஹைட்ரோ எலக்ட்ரிக் அணை கட்டுவதால் இயற்கை பாதிப்படையும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.
இப்பகுதியில் அமைந்துள்ள நெரட்வா நதியின் தண்ணீர் போஸ்னியா மலைகளின் செங்குத்து பள்ளதாக்கு வழியாக சென்றுக்கொண்டிருக்கிறது.
இந்நிலையில் பள்ளதாக்கின் நடுவே ஹைட்ரோ-எலக்ட்ரிக் அணை கட்டும் பணியை அந்நாட்டு அரசு மேற்கொண்டுவருகிறது.
இது குறித்து கருத்து தெரிவித்த சமூக ஆர்வலர்கள் இயற்கை மிகுந்த இந்த நதி சுற்றுலா தலமாக இருந்து வருவதாகவும், இந்த அணை கட்டும் நடவடிக்கையால் நீர் மட்டத்தையும், கடல் வாழ்விடங்களையும் பாதிக்கும் என தெரிவித்தனர்.