தென்கொரிய தொழிற்சாலை விபத்தில் உயிரிழந்த 23 பேரின் குடும்பத்தினரிடம் ஆலை உரிமையாளர் மன்னிப்பு கோரினார்.
ஹ்வாசோங் நகரில் உள்ள லித்தியம் ஆலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் 23 பேர் உயிரிழந்த நிலையில் காயமடைந்தவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் காயமடைந்தவர்களை சந்தித்து ஆறுதல் கூறிய ஆலை உரிமையாளர் பார்க் சூன்-குவான் உயிரிழந்தோரின் குடும்பத்தாரிடம் தொழிற்சாலையின் சார்பாக வருத்தம் தெரிவித்தார்.