திமுக எம்பிக்கள் உதயநிதியின் பெயரை கூறி நாடாளுமன்றத்தில் பதவியேற்றது ஜனநாயகப் படுகொலை என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விமர்சித்துள்ளார்.
நெருக்கடி நிலை பிரகடனம் செய்யப்பட்ட நாளை கருப்பு தினமாக அனுசரித்து, சென்னை மேற்கு மாம்பலத்தில் பாஜக சார்பில் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில், பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்துகொண்டு உரையாற்றினார். கூட்டத்தைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், திமுக தற்போது இளவரசரைத் தேர்ந்தெடுத்துக் கொண்டிருப்பதாக குறிப்பிட்டார்.