சென்னை கோயம்பேடு சந்தையில் தக்காளியின் விலை ஒரே நாளில் கிலோவுக்கு 25 ரூபாய் குறைந்துள்ளது.
சென்னை கோயம்பேடு சந்தைக்கு ஆந்திரா மற்றும் கர்நாடகாவின் பல்வேறு பகுதிகளிலிருந்து, தக்காளி விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது.
கோயம்பேடு சந்தையில் தக்காளியின் வரத்து அதிகரித்ததால், அதன் விலை ஒரே நாளில் 25 ரூபாய் குறைந்துள்ளது. அதன்படி, நேற்று 55 ரூபாய்க்கு விற்கப்பட்ட தக்காளி, இன்று 30 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
அதேபோல் நேற்று 120 ரூபாய்க்கு விற்கப்பட்ட பீன்ஸ், இன்று 40 ரூபாய் குறைந்து 80 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
மற்ற காய்கறிகளின் வரத்தும் கணிசமாக அதிகரித்துள்ளதால், அவற்றின் விலையும் 5 ரூபாய் வரை குறைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.