அரவிந்த் கெஜ்ரிவாலை ஐந்து நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்ககோரி சிபிஐ தொடர்ந்த மனு மீதான உத்தரவை டெல்லி ரோஸ் அவன்யூ நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கடந்த மார்ச் மாதம் 21ம் தேதி அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.
அதனைத்தொடர்ந்து அவருக்கு வழக்கப்பட்ட ஜாமீன், டெல்லி உயர்நீதிமன்றத்தால் நிறுத்திவைக்கப்பட்டது.
அதனை எதிர்த்து உச்சநீதிமன்றம் சென்ற கெஜ்ரிவாலை கலால் கொள்கை முறைகேடு வழக்கு தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர்.
அதனையடுத்து கலால் கொள்கை முறைகேடு தொடர்பாக கெஜ்ரிவாலிடம் விசாரணை நடத்த, 5 நாட்கள் காவல் வழங்க வேண்டும் என சி.பி.ஐ. சார்பில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சிபிஐ வாதங்களை கேட்ட பின்பு உத்தரவை ஒத்திவைத்தனர்.