நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் முறையாக ஊதியம் வழங்கப்படாததால் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ராசிபுரம் நகராட்சியில் தனியார் நிறுவனத்தின் மூலமாக 93 ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இவர்களுக்கு தினக்கூலியாக 480 ரூபாய் நிர்ணயம் செய்யப்பட்டு 390 ரூபாய் வழங்கப்படுகிறது. இந்நிலையில் கடந்த சில மாதங்களாக முறையாக ஊதியம் வழங்கப்படாததால் பணியாளர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.
மேலும், பணியை புறக்கணித்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்து வந்த நகராட்சி தூய்மை அலுவலர் செல்வராஜ் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தபின் போராட்டம் கைவிடப்பட்டது.