கூடலூரில், காரை தாக்கி சேதப்படுத்திய ஒற்றை ஆண் காட்டு யானையின் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன.
நீலகிரி மாவட்டம் கூடலூரில் அடர்ந்த வனப்பகுதிகளில் இருந்து வெளியேறும் காட்டு யானைகள், குடியிருப்பு பகுதிகளில் உலா வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
இந்நிலையில், கூடலூரில் இருந்து வயநாட்டுக்கு செல்லும் சாலையில் உள்ள நெலாக்கோட்டை பகுதியில், சுற்றித்திரிந்த ஒற்றை ஆண் காட்டு யானை, சாலையில் எதிரே வந்த காரை வழிமறித்து தாக்கியதில் கார் சேதமடைந்தது.
காரில் குழந்தையுடன் பயணித்த தம்பதியர் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர். அவர்கள் அனைவரும், நெல்லக்கோட்டை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.