திருநெல்வேலி மாஞ்சோலை எஸ்டேட்டை அடமானமாக வைத்து 50 கோடி ரூபாய் கடன் பெற்ற விவகாரத்தில் அடமானத்தை ரத்து செய்ய பத்திரப்பதிவுத்துறை மறுப்பு தெரிவித்துள்ளது.
நெல்லை மாவட்டம் சிங்கம்பட்டி ஜமீனிடம் இருந்து 99 ஆண்டு கால குத்தகையாக 23 ஆயிரம் ஏக்கரை பெற்ற தேயிலை தோட்ட பிபிடிசி நிர்வாகத்தின் குத்தகை காலம், வரும் 2028ல் நிறைவு பெறுகிறது.
இதற்கிடையே கடந்த 2015ல் மாஞ்சோலை எஸ்டேட் பகுதியில் உள்ள 8 ஆயிரத்து 373 ஏக்கர் 57 சென்ட் நிலத்தை ஜமீன் சொத்துகள் எனக்கூறி போலி ஆவணங்கள் மூலம் அடமான பத்திரமாக பதிவு செய்யப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பாக சார்பதிவாளர் சாந்தி உள்பட 3 அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
அதனைத்தொடர்ந்து இந்த அடமானத்தை ரத்து செய்ய தோட்ட நிர்வாகம் முயற்சி மேற்கொண்ட நிலையில், அதற்கு பத்திரப்பதிவுத்துறை மறுப்பு தெரிவித்துள்ளது.
மேலும், அரசு நிலத்தை அபகரிக்க முயன்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.