4 கட்சி தாவியவருக்கு காங்கிரஸ் கட்சியின் வரலாறு தெரிந்திருக்க வாய்ப்பில்லை!- அண்ணாமலை
Jul 28, 2025, 11:18 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

4 கட்சி தாவியவருக்கு காங்கிரஸ் கட்சியின் வரலாறு தெரிந்திருக்க வாய்ப்பில்லை!- அண்ணாமலை

Web Desk by Web Desk
Jun 26, 2024, 05:33 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நேரு மட்டுமே இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டார் என்று வரலாறு எழுதி
வைத்திருக்கும் காங்கிரஸ் கட்சிக்கு, சுதந்திரப் போராட்டத்தில் ஆர்.எஸ்.எஸ்.ஸின் பங்கு என்ன என்பது எப்படித் தெரியும்? எனப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார்.

இது குறித்து அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில்,

விடுதலைப் போராட்ட காலத்தில் பல ஆண்டு காலம் சிறையில் இருந்த நேரு பாரம்பரியத்தில் வந்த இந்திரா காந்தியின் பெருமையை, பாஜகவும் அண்ணாமலையும் அறிந்திருக்க வாய்ப்பில்லை என்று கூறியிருக்கிறார் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் அண்ணன் செல்வப்பெருந்தகை. இந்திரா காந்தி அவர்களின் பெருமையைப் பற்றிப் பேசக் கூட, நேருவின் மகள் என்று தான் தொடங்க வேண்டியிருக்கிறது. இதில் என்ன
பெருமை இருக்கிறது என்பதை அண்ணன் செல்வப்பெருந்தகை அவர்கள் தான் கூற வேண்டும்.

வாரிசு என்பதால் மட்டுமே தலைமைப் பதவிக்கு வரும் நேரு குடும்பத்தினரை விட, ஐந்து கட்சிகளில் மாறி மாறிப் பயணம் செய்திருந்தாலும், தனது கடின உழைப்பால், ஒவ்வொரு
கட்சியிலும் சிறப்பாகப் பணியாற்றி, இன்று காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவராக உயர்ந்திருக்கும் அண்ணன் செல்வப்பெருந்தகை அவர்கள்தான் பெருமைக்குரியவராகத் தெரிகிறார்.

எனக்குப் பாதியில் வந்ததால் காங்கிரஸ் கட்சியின் வரலாறு குறித்து அண்ணன் செல்வப்பெருந்தகை அவர்களுக்கு முழுமையாகத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இந்திரா காந்தி அவர்களைப் பிரதமர் பொறுப்பில் அமர வைத்தது.

இன்று அண்ணன்  செல்வப்பெருந்தகை அவர்கள் அமர்ந்திருக்கும் சத்தியமூர்த்தி
பவனை உருவாக்கிய பெருந்தலைவர் காமராஜர் அவர்கள்தான் என்பதும், பிரதமர் பதவியில் இருந்த இந்திரா காந்தி அவர்களின் நடவடிக்கைகள் பிடிக்காமல், கட்சியிலிருந்து நீக்கியதும்
அவரேதான் என்பதையும் அண்ணனுக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன்.

கர்மவீரர் காமராஜர், தனது வாழ்வின் இறுதிவரை, இந்திரா காந்தி அவர்களை ஏற்றுக்கொள்ளவில்லை என்பதும், அண்ணன் கூறிய இந்திரா காந்தியின் பெருமைகள் வரிசையில் வருமா என்பதை, அண்ணன்தான் விளக்க வேண்டும்.

நெருக்கடி நிலையை அறிவிக்கும் முன்னரே, நமது நாட்டை நெருக்கடி நிலையில்தான் இந்திரா காந்தி அவர்கள் வைத்திருந்தார் என்பதும், அதனால்தான், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களே அவரைக் கடுமையாக எதிர்த்தனர் என்பதும், நெருக்கடி நிலை அறிவிக்கும் முன்னர் நமது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி அதலபாதாளத்தில் கிடந்ததும் அண்ணன் செல்வபெருந்தகை அவர்களுக்குத் தெரியுமா? நெருக்கடி நிலையைக் காரணம் காட்டி, எதிர்க்கட்சிகள் ஆட்சியிலிருந்த பல மாநில அரசுகளைக் கலைத்ததும், அதில் இன்றைய காங்கிரஸ் கட்சியின் கூட்டணிக் கட்சியான திமுக அரசும் ஒன்று என்பதையும் அண்ணன் மறந்துவிட்டார் என்று எண்ணுகிறேன்.

இத்தனைக்கும், நெருக்கடி நிலை அறிவிப்பையும், பிரதமர் உள்ளிட்ட உயர் பதவிகள் நியமனத்தில், நீதிமன்றங்கள் தலையிடக் கூடாது என்ற அரசியல் சாசனத்தில் 39 ஆவது பிரிவு திருத்தத்தை மனமுவந்து ஆதரித்த கட்சி திமுக.

இன்று நீங்கள் இருவரும் அதனை மறக்கவோ, மறைக்கவோ முயற்சிக்கலாம். ஆனால், வரலாறு மாறாது என்பதை அண்ணனுக்கு நினைவுபடுத்தக் கடமைப்பட்டிருக்கிறேன்.
இந்திரா காந்தி ஆட்சிக்காலத்தில், அவரது மகன் சஞ்சய் காந்தி தலையீட்டை இல்லை என்று சொல்கிறாரா அண்ணன் செல்வப்பெருந்தகை? சஞ்சய் காந்தியின் கார் நிறுவனத்துக்குக்
கடன் வழங்குவதற்காகவே, ரிசர்வ் வங்கியின் கொள்கை முடிவுகளை மாற்ற வசதியாக, தனக்கு வேண்டப்பட்டவரை ரிசர்வ் வங்கி கவர்னராக நியமித்த வரலாறு கொண்ட காங்கிரஸ் கட்சிக்கு, ஊழலும், அரசியல் அத்துமீறலும், ஜனநாயக விரோதமும் தவிர
வேறு என்ன பெரிய பெருமை இருந்து விடப் போகிறது? இந்திரா காந்தி பெற்ற தேர்தல் வெற்றி செல்லாது என்பது குறித்த விசாரணை, நான்கு நாட்களில் நீதிமன்றத்தில் வரவிருக்கிறது என்பது தெரிந்ததும், அரசியல் சாசனத்தையே திருத்திய காங்கிரஸ் கட்சியும், அதன் சந்தர்ப்பவாத இந்தி கூட்டணி கட்சிகளும், இன்று அரசியல் சாசனத்தைக் காப்பாற்றுவோம் என்று கூறித் திரிவதை விட நகைமுரண் வேறு இருக்க முடியுமா?

ஜனநாயகத்துக்கு விரோதமாக, நெருக்கடி நிலையை அறிமுகப்படுத்தி, பொதுமக்கள் கோபத்துக்கு ஆளாகி, அதன் பின்னர் வந்த தேர்தலில் தோற்றுப் போன இந்திரா காந்தி, எந்த நாட்டு ஜனநாயகத்தைக் காப்பாற்றினார் என்று அண்ணன் செல்வப்பெருந்தகை பெருமைப்படுகிறார் என்பது தெரியவில்லை.

543 உறுப்பினர்கள் கொண்ட மக்களவையில், தொடர்ந்து மூன்று தேர்தல்களாக இரட்டை இலக்கத்தைத் தாண்டாத ஒரு கட்சியின் தலைவருக்கு, எதிர்க்கட்சித் தலைவர் அந்தஸ்து கிடைப்பதுதான் ஜனநாயகத்தின் அழகு இதனையும் ராகுல் காந்தியின் சாதனையாகப் பேசுவது, அண்ணன் செல்வப்பெருந்தகைஅவர்களின் அறியாமையைக் காட்டுகிறது.

நேரு மட்டுமே இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டார் என்று வரலாறு எழுதி
வைத்திருக்கும் காங்கிரஸ் கட்சிக்கு, சுதந்திரப் போராட்டத்தில் ஆர்.எஸ்.எஸ்ஸின் பங்கு என்ன என்பது எப்படித் தெரியும்?

ஆர்.எஸ்.எஸ்ஸை விடுங்கள், சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியின் வேறு எந்தத் தலைவர்களின் வரலாறாவது உங்களுக்குத் தெரியுமா? அவர்களது
இருக்கின்றன என்பது தெரியுமா? குடும்பங்கள் எங்கே தேர்தலில் தோற்றபின் நமது நாட்டிலிருந்து வெளிநாட்டிற்கு தன் குடும்பத்தாருடன் தப்பிக்க முயன்றார் இந்திரா காந்தி என்பது வரலாற்று உண்மை. உங்கள் வசதிக்கு அரசியல் சாசனத்தை மாற்றியிருக்கலாம், வரலாற்றை மாற்றமுடியாது என்பதை திரு செல்வப்பெருந்தகை அவர்களுக்கு தெரிவிக்க விரும்புகிறேன் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: bjp k annamalai4 The party hopper may not know the history of the Congress party!- Annamalai
ShareTweetSendShare
Previous Post

மாணவன் கடிதம் மகிழ்ச்சியளிக்கிறது – X தளத்தில் எல்.முருகன் பதிவு!

Next Post

கார் பருவ சாகுபடிக்காக ராமநதி அணையில் நீர் திறப்பு!

Related News

அலறும் அஜர்பைஜான் : இந்திய ஆயுதங்களை வாங்கி குவிக்கும் ஆர்மேனியா!

ஆப்ரேஷன் சிந்தூர் ஓயவில்லை, தொடரும்..! – ராஜ்நாத் சிங்

சீன ஹைப்பர் சோனிக் ஏவுகணையால் சிக்கல் : அமெரிக்காவின் B-21 ரைடரும் தப்ப முடியாது!

குடும்பம் குடும்பமாக வெளியேறிய தொழிலாளர்கள் : குப்பை நகரமாக மாறுகிறதா குருகிராம்?

AI வருகையால் அதிரடி மாற்றம் : 12000 பேரை பணிநீக்கம் செய்யும் TCS நிறுவனம்!

காசாவில் கடும் உணவுப் பஞ்சம் : தினமும் 10 மணி நேரம் போர் நிறுத்தம்!

Load More

அண்மைச் செய்திகள்

சதுரங்க நாயகி திவ்யா தேஷ்முக்!

பராக் ஒபாமாவை சீண்டும் டிரம்ப் : AI சித்தரிப்பால் மீண்டும் சர்ச்சை!

விளை நிலங்களில் சிப்காட் தொழிற்பேட்டை : கொந்தளிக்கும் விவசாயிகள்!

குடியிருப்புப் பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளை அகற்ற வேண்டும் – அண்ணாமலை

இஸ்ரோ – நாசா இணைந்து தயாரித்த ‘நிசார்’ செயற்கைக்கோள் : சிறப்பு அம்சங்கள்!

9 தீவிரவாத முகாம்கள் 22 நிமிடத்தில் முற்றிலுமாக அழிக்கப்பட்டது : ராஜ்நாத் சிங்

மகளிர் உலகக்கோப்பை செஸ் தொடரில் இந்தியாவின் திவ்யா தேஷ்முக் சாம்பியன்!

ஈரோடு : மாநகராட்சி குப்பை கிடங்கில் தீ விபத்து!

பஹல்காம் தாக்குதல் : தீவிரவாதிகள் என்கவுண்டர்!

சேலம் : சேதமடைந்து காணப்படும் பள்ளி வகுப்பறைகள் – சாலை மறியலில் ஈடுபட்ட பள்ளி மாணவர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies