தென்காசி மாவட்டம், கடையம் ராமநதி அணையில் இருந்து கார் பருவ சாகுபடிக்காக தண்ணீர் திறந்து விடப்பட்டது.
கடையம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள ராமநதி அணை மூலம் சுமார் ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
இந்நிலையில் இங்கிருந்து கார் பருவ சாகுபடிக்காக அக்டோபர் 31-ம் தேதி வரை தண்ணீர் திறந்து விட தமிழக அரசு உத்தரவிட்டது.
அந்தவகையில் ராமநதி அணையில் இருந்து, மாவட்ட ஆட்சியர் கிஷோர் தண்ணீரை திறந்து விட்டார். அணைக்கு வரும் நீர் வரத்தைப் பொறுத்து 128 நாட்களுக்கு தேவைக்கு ஏற்ப நீர் திறந்து விடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் பாசன வசதி பெறும் நிலத்தின் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.