கர்மவீரர் காமராஜர் இறப்பிற்கு கூட அவசரநிலை பிரகடனம் சட்டம் தான் காரணம் என பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்ட பா.ஜ.க அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், அவசரநிலை பிரகடனம் காலத்தில் பொதுமக்களுக்கு கட்டாய கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாக கூறினார்.
எதிர்காலத்தில் இந்திய ஜனநாயகம் காக்கப்பட வேண்டும் என்பதால் தான், அவசர நிலை பிரகடனம் கொண்டு வந்து 50 ஆண்டுகள் ஆன நிலையிலும், இதனால் ஏற்பட்ட பாதிப்புகளை பாஜகவினர் வெளிகொண்டு வருவதாகவும் பழனிசாமி தெரிவித்தார்.