உத்தரப் பிரதேசத்தின் நொய்டா அருகே, கட்டுமானத்தில் உள்ள வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் மூன்று குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், நொய்டாவின் தாத்ரி பகுதியிலுள்ள Khodna Kalan கிராமத்தில், கட்டுமானத்தில் உள்ள வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது.
இதில், 8 குழந்தைகள் இடிபாடுகளுக்கு இடையே சிக்கிக் கொண்டனர். அனைவரும் மீட்கப்பட்டு மருத்துமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், அதில் 3 குழந்தைகள் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். எஞ்சிய 5 குழந்தைகளுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.