ஆந்திர மாநிலம் கோதாவரி ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற பெண்ணை காவல் துறையினர் பாதுகாப்பாக மீட்டனர்.
ராஜமுந்தி பகுதியை சேர்ந்த துடால நாகலட்சுமி என்ற பெண் குடும்பத்தகராறு காரணமாக ரயில் பாலத்தில் இருந்து ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
இதைக்கண்ட அப்பகுதியினர் அளித்த தகவலின் பேரில் நிகழ்விடத்திற்கு வந்த காவல்துறையினர் படகு மூலம் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அந்த பெண்ணை பத்திரமாக மீட்டனர்.
பின்னர் நாகலட்சுமிக்கு அறிவுரை வழங்கிய காவல்துறையினர் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.