டெல்லியில் பெய்த பலத்த மழையால் எய்ம்ஸ் மருத்துவமனையின் தரைதளத்தை மழைநீர் சூழ்ந்தது.
இதனால் அங்கு வாகனத்தை நிறுத்தியிருந்த நபர்கள் கடும் சிரமத்தை சந்தித்தனர்.
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ஹரியானா, உத்தர பிரதேசம் என அண்டை மாநிலங்களிலிருந்து தினந்தோறும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர்.
இந்த நிலையில், மருத்துவமனையை சூழ்ந்த மழைநீரால் நோயாளிகள் அசவுகரியம் அடைந்தனர்.