சிஏஜி அறிக்கையை மேற்கோள்காட்டி, தமிழகத்தில் டாஸ்மாக் வருவாயில் வெளிப்படைத் தன்மை இல்லை என தமிழக பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.
கோவையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், டாஸ்மாக் மதுவின் தரத்தில் கிக் இல்லாததால், சிலர் கள்ளச்சாராயத்தை நாடுவதாக அமைச்சர் துரைமுருகன் சட்டப் பேரவையில் பேசியதை சுட்டிக்காட்டி, மதுவின் தரத்தை சோதனைக்கு உட்படுத்த வேண்டும் என வலியுறுத்தினார்.
சென்னையில் சுகாதார கட்டமைப்பு அதல பாதாளத்திற்கு சென்றுள்ளதாக அண்ணாமலை குற்றம் சாட்டினார்.
சுகாதார பிரச்சினை தொடர்பாக சட்டப் பேரவையில் யாரும் விவாதிப்பதில்லை என்றும் அண்ணாமலை தெரிவித்தார்.
கடந்த மூன்று ஆண்டுகளில் முதலமைச்சர் மேற்கொண்ட வெளிநாட்டு பயணங்களால் தமிழக மக்களுக்கு எந்த பயனும் ஏற்படவில்லை என அண்ணாமலை விமர்சித்தார்.