சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இந்திய கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி மற்றும் ஜடேஜா ஆகியோர் அறிவித்துள்ளனர்.
ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி, நடப்பு ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்று சாம்பியன் பட்டத்தை தன்வசப்படுத்தி உள்ளது.
பரபரப்பாக நடைபெற்ற இறுதிப் போட்டியில் 76 ரன்கள் எடுத்த விராட் கோலி, ஆட்ட நாயகன் விருதைப் பெற்றார். அதனைத்தொடர்ந்து சர்வதேச டி-20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்தார்.
உலகக்கோப்பையை வெல்ல வேண்டுமென்ற கனவு நனவாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவும் டி-20 கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
இதே போல ஆல்ரவுண்டரான ரவீந்திர ஜடேஜாவும் சர்வதேச டி-20 போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் அறிவித்துள்ளார். இந்திய அணியின் பயிற்சியாளரும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான ராகுல் டிராவிட்டிற்கும் இது கடைசி போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.