சிவகங்கை அருகே வெடிபொருள் பதுக்கி வைத்திருந்ததாக ஒருவர் கைது செய்யப்பட்டார்.
சூரக்குளம் அரசனேரி கீழமேடு கிராமத்தை சேர்ந்த அரவிந்த் என்பவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன.
இந்நிலையில் இவரது தந்தைக்கு சொந்தமான விவசாய நிலத்தில் அமைந்திருந்த மோட்டார் பம்ப் செட் அறையில் அதிக சத்தத்துடன் மர்ம பொருள் வெடித்து சிதறியது. இதில் அக்கட்டடத்தின் ஓடுகள் மற்றும் சுவர் சேதமடைந்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து விஏஓ அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், வெடி பொருட்கள் பதுக்கி வைத்திருந்ததாக அரவிந்தனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.