ஜார்க்கண்ட் மாநிலம் கிரிதி மாவட்டத்தில், கட்டுமானப் பணியில் இருந்த பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
ஃபதேபூர் மற்றும் பெல்வாகதி கிராமங்களுக்கு இடையேயான போக்குவரத்தை எளிதாக்கும் வகையில், ஆர்கா ஆற்றின் குறுக்கே 5 கோடி ரூபாய் மதிப்பில் பாலம் ஒன்று கட்டப்பட்டு வருகிறது.
இந்த பாலத்தின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக இந்த சம்பவத்தில் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை.