கடலூர் மாவட்டம், வண்டிபாளையம் பகுதியில் அதிமுக முன்னாள் கவுன்சிலர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
கடலூர் மாவட்டம், வண்டிபாளையம் அதிமுக முன்னாள் கவுன்சிலரான புஷ்பநாதன் என்பவர் நேற்று முன்தினம் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
குற்றவாளிகளை கைது செய்யக்கோரி உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், சந்தோஷ், நேதாஜி, அஜய், உள்ளிட்ட மூன்று பேரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். கொலையில் தொடர்புடைய மேலும் சிலரை போலீசார் தேடி வருகின்றனர்.