லெபனானில் வசிக்கும் சவுதி மக்கள் உடனடியாக வெளியேறும்படி அந்நாட்டு அரசு அறிவுறுத்தியுள்ளது.
இஸ்ரேல்-காசா போர் கடந்த 8 மாதங்களுக்கும் மேலாக தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் லெபனான் பகுதியிலிருக்கும் ஹிஸ்புல்லா கிளர்ச்சியாளர்கள் காசாவுக்கு ஆதரவாக செயல்படுவதாக கூறப்படுகிறது.
இதையறிந்த இஸ்ரேல் அதிரடி தாக்குதல் நடத்தவுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் லெபனான் முழுவதும் போர் பதற்றம் நிலவி வருகிறது.
இந்நிலையில் சவுதி குடியுரிமை பெற்று லெபனானில் வசிக்கும் மக்கள் உடனடியாக அங்கிருந்து வெளியேறும் படி சவுதி அரேபியா அரசுஅறிவுறுத்தியுள்ளது.