விம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடர் லண்டனில் இன்று கோலாகலமாகத் தொடங்குகிறது.
பாரம்பரியம் மிக்க இப்போட்டியின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடப்பு சாம்பியன் கார்லோஸ் அல்கராஸ், செர்பிய நட்சத்திரம் நோவாக் ஜோகோவிச் உள்ளிட்ட வீரர்கள் பங்கேற்க உள்ளனர்.
இதில் இந்திய வீரர் சுமித் நாகல் ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவு ஆட்டங்களில் களமிறங்க உள்ளார்.
அதே போல மகளிர் ஒற்றையர் பிரிவில் நடப்பு சாம்பியன் மார்கெடா வோண்ட்ருசோவா, நம்பர் 1 வீராங்கனை இகா ஸ்வியாடெக் உள்ளிட்ட வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர்.
இந்த டென்னிஸ் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் வெற்றி பெறும் சாம்பியன்களுக்கு முதல் பரிசுத் தொகையாக தலா 28 புள்ளி 5 கோடி ரூபாய் அறிவிக்கப்பட்டுள்ளது.