முன்னாள் குடியரசுத் துணை தலைவர் வெங்கையா நாயுடுவுக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவர் எழுதியுள்ள கடிதத்தில், மாநிலங்களவையில் 370 மற்றும் 35(ஏ) சட்டப்பிரிவுகளை நீக்கும் முடிவு எடுக்கப்பட்டபோது முக்கிய கருவூலராக திகழ்ந்தவர் வெங்கையா நாயுடு என குறிப்பிட்டுள்ளார்.
மேலும், 50 ஆண்டுகளுக்கு முன்பு எமர்ஜென்சிக்கு எதிராக போராடி சிறை சென்றவர் என குறிப்பிட்டுள்ள அவர், பொது சேவையில் அசைக்க முடியாத அர்ப்பணிப்வை வழங்கியவர் என புகழாரம் சூட்டியுள்ளார்.