நாட்டின் ஒற்றுமைக்கு எதிராக செயல்படும் சக்திகளை திமுக அரசு பின்னணியில் இருந்து இயக்குகிறதோ என்ற சந்தேகம் எழுகிறது!- வானதி சீனிவாசன்
Mar 15, 2026, 12:31 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நாட்டின் ஒற்றுமைக்கு எதிராக செயல்படும் சக்திகளை திமுக அரசு பின்னணியில் இருந்து இயக்குகிறதோ என்ற சந்தேகம் எழுகிறது!- வானதி சீனிவாசன்

நீலகிரி மாவட்டம், கோத்தகிரி பகுதியில் எழுதப்பட்டுள்ள பிரிவினை முழக்கங்கள்!

Murugesan M by Murugesan M
Jul 1, 2024, 03:45 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பிரிவினையைத் தூண்டும், தேசத்தின் ஒற்றுமைக்கு எதிராக செயல்படும் சக்திகளை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்று தேசிய மகளிரணி தலைவரும் பா.ஜ.க. கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

நீலகிரி மாவட்டத்தின் கோத்தகிரி பகுதியில், சாலையோர சுவர்களில், ‘INDIA Impose NEET, Tamil Nadu Quit India’ (நீட் தேர்வை இந்தியா திணிக்கிறது.

இந்தியாவிலிருந்து தமிழ்நாடு வெளியேற வேண்டும்), ‘இந்தியா ஒழிக’ என்பது போன்ற வாசகங்கள் எழுதப்பட்டுள்ளது அதிர்ச்சி அளிக்கிறது.

மருத்துவ படிப்புகளுக்கு சேர்வதற்கான நீட் நுழைவுத் தேர்வு என்பது, உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, திமுக அங்கம் வகித்த காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் கொண்டுவரப்பட்டது.

கடந்த 7 ஆண்டுகளாக நீட் நுழைவுத் தேர்வு இந்தியா முழுவதும் வெற்றிகரமாக நடந்து வருகிறது. இந்த ஆண்டு மக்களவைத் தேர்தல் நடந்து கொண்டிருந்த நேரத்தில், நீட் தேர்வு நடந்ததால், பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டு புகார்கள் வந்துள்ளன.

மத்திய பாஜக அரசின் உத்தரவுப்படி, இது தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது. நீட் தேர்வை வெளிப்படை தன்மையுடன், நியாயமான முறையில் நடத்திட நிபுணர்கள் கொண்ட குழு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.

இந்தியா உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு. அரசு கொண்டுவரும் எந்த ஒரு திட்டத்தையும் ஜனநாயக வழியில் எதிர்க்க அனைவருக்கும் உரிமை உள்ளது. அதன்படி, நீட் தேர்வை எதிர்த்து குரல் கொடுக்கலாம். போராடலாம்.

அதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது. ஆனால், ‘நீட் எதிர்ப்பு’ என்ற பெயரில், தேச பிரிவினையை தூண்டுவதை எந்த வகையிலும் ஏற்க முடியாது. இது மன்னிக்கவே முடியாத குற்றம்.

நீலகிரி மாவட்டத்தின் கோத்தகிரி பகுதியில், சாலையோர சுவர்களில் எழுதப்பட்டுள்ள வாசகங்களில், ‘இந்தியா ஒழிக’ என்பது மட்டும் கைகளால் எழுதப்பட்டுள்ளது. ஆனால், ‘INDIA Impose NEET, Tamil Nadu Quit India’ என்ற பிரிவினையை தூண்டும் வாசகங்கள் அதற்கான பிரின்டிங் பிளாக்’ தயாரிக்கப்பட்டு எழுதப்பட்டுள்ளது.

இதிலிருந்து தேசப்பிரிவினை பிரச்சாரத்தை அமைப்பு ரீதியாக திட்டமிட்டு செயல்படுத்துவது தெளிவாகத் தெரிகிறது. தேசப் பிரிவினையை தூண்டும், நாட்டின் ஒற்றுமைக்கு எதிராக செயல்படும் சக்திகளை திமுக அரசு பின்னணியில் இருந்து இயக்குகிறதோ என்ற சந்தேகம் எழுகிறது.

ஏனெனில், திமுக, ‘தனித் தமிழ்நாடு’ என்பதை அடிப்படைக் கொள்கையாகக் கொண்ட கட்சி. நமது அரசியல் சட்டம் உருவான பிறகு, பிரிவினை கோரிக்கையை வெளிப்படையாக முன் வைத்தால், கட்சி நடத்த முடியாது. ஆட்சி அதிகாரத்தை பிடிக்க முடியாது என்பதால் பிரிவினை கோரிக்கையை அக்கட்சி கைவிட்டது. ஆனாலும், மக்களிடம் பிரிவினை எண்ணத்தை விதைப்பதை ஒருபோதும் கைவிடவில்லை.

இப்போது பிரிவினை சித்தாந்தத்தை மக்களிடம் விதைப்பதற்கு, ஓர் ஆயுதமாக ‘நீட் எதிர்ப்பை’ கையில் எடுத்துள்ளது. தேசத்திற்கு எதிரான அதுவும் பிரிவினை சித்தாந்தத்தை விதைக்கும் எந்த ஒரு செயல்பாட்டையும் அனுமதிக்க கூடாது.

அவர்களை இரும்புக் கரம் கொண்டு கொடுக்க வேண்டும். பிரிவினையைத் தூண்டும் வாசகங்களை எழுதியவர்களை கண்டறிந்து உடனடியாக கைது கைது செய்ய வேண்டும். தமிழ்நாட்டில் பிரிவினைவாதிகளுக்கு எந்த இடமும் இல்லை என்பதை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உறுதிப்படுத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: vanathi srinivasan bjp
ShareTweetSendShare
Previous Post

சாலையில் ஊர்ந்து சென்ற முதலையின் வீடியோ வைரல்!

Next Post

ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! – சுப்ரியா சாஹு மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளராக நியமனம்!

Related News

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

Load More

அண்மைச் செய்திகள்

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

எங்கே போகும் இந்த பாதை…! – சந்திசிரிக்கும் சட்டம் ஒழுங்கு….ரீல்ஸ் மோகத்தில் முதல்வர்

ஐம்பொன் சிலைகளுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரிகளை மாற்றி அமைத்து தரும்படி மத்திய சட்ட அமைச்சரிடம் சிலை தயாரிப்பாளர்கள் கோரிக்கை!

மேற்காசிய பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் – லாபத்தில் மிதக்கப்போகும் அமெரிக்க ஆயுத விற்பனை நிறுவனங்கள்!

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies