கென்யாவில் புதிய வரி உயர்வுக்கு எதிரான போராட்டங்களில் இதுவரை 39 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கென்யா தேசிய மனித உரிமைகள் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், புதிய வரி உயர்வுக்கு எதிரான போராட்டங்களில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை அரசு வெளிப்படுத்திய எண்ணிக்கையை விட இருமடங்கு அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜூன் 18 முதல் ஜூலை 1ஆம் தேதி வரை நாடு முழுவதும் நடைபெற்ற போராட்டங்களில் 39 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 361 பேர் காயமடைந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
போராட்டங்களில் ஈடுபட்ட 32 பேர் மாயமானதாகவும், 627 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவமனைகள், அரசு நிறுவனங்கள் மீதான போராட்டங்களின் தாக்குதலுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் கண்டனம் தெரிவித்துள்ளது.