கிழக்கு கரீபியன் தீவு நாடான பர்படோஸில் சூறைக்காற்று வீசியதால் விமானப் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது.
இதனால் டி20 உலக கோப்பை போட்டிக்காக அங்கு சென்ற இந்திய கிரிக்கெட் வீரர்கள் அவதிக்குள்ளாகினர்.
பர்படோஸில் வீசிய கடும் சூறைக்காற்றால் மின்சாரம் மற்றும் குடிநீர் விநியோகம் துண்டிக்கப்பட்டது. மரங்கள் வேரோடு சாய்ந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விமான சேவை ரத்து செய்யப்பட்டது.
கடைகளும், வர்த்தக நிறுவனங்களும் காலவரையின்றி மூடப்பட்டுள்ளன. இந்நிலையில், டி20 உலக கோப்பை போட்டிக்காக அங்கு சென்ற இந்திய கிரிக்கெட் வீரர்களும், ஊடகத்தினரும் நாடு திரும்ப முடியாமல் தவிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.