குஜராத்தில் கனமழை பெய்து வரும் நிலையில், இரு தேசிய நெடுஞ்சாலைகள் மூடப்பட்டன.
அசாம், குஜராத் உள்ளிட்ட வடமாநிலங்களில் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், குஜராத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது.
ஜாம்நகர், போர்பந்தர், ஜூனாகத் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்தது. கல்யாண்பூர் தாலுகாவில் 174 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. ஜூனாகத் பகுதியில் உள்ள இருதுண்டு தேசிய நெடுஞ்சாலைகள் மூடப்பட்டன.