வங்கிக் கடனை திரும்ப செலுத்தாத வழக்கில் தொழிலதிபர் விஜய் மல்லையாவுக்கு மும்பை சிறப்பு நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.
2007-2012 ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் விஜய் மல்லையா மற்றும் அவரது நிறுவனத்திற்கு வழங்கிய 180 கோடி ரூபாய் கடனை திரும்ப செலுத்தாததால் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டது.
இது தொடர்பாக விஜய் மல்லையா உட்பட 10 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில், இந்த வழக்கு மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது.
குற்றம்சாட்டப்பட்ட 10 பேருக்கும் சம்மன் அனுப்பப்பட்ட நிலையில், விஜய் மல்லையா ஆஜராகாததால் அவருக்கு மும்பை சிறப்பு நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.