பார்படோசில் இருந்து தனி விமானம் மூலம் இந்திய கிரிக்கெட் வீரர்கள் நாளை நாடு திரும்புகின்றனர்.
மேற்கு இந்தியத் தீவுகளில் சூறாவளி அச்சுறுத்தல் காரணமாக பிரிட்ஜ் டவுன் விமான நிலையத்தில் விமானச் சேவை பாதிக்கப்பட்டுள்ளன.
இதன் காரணமாக டி-20 உலகக்கோப்பை போட்டியில் வென்ற இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் நாடு திரும்புவதில் தாமதம் ஏற்பட்டது.
இந்த நிலையில், பார்படோசில் இருந்து தனி விமானம் மூலம் இந்திய வீரர்கள் நாளை நாடு திரும்புகின்றனர். இரவு சுமார் 7 மணியளவில் வீரர்கள் டெல்லி வர உள்ளதாக கை தரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.