திருச்சியில் சேதமடைந்த பேருந்தில் மாணவர்களை பள்ளிக்கு அழைத்துச் செல்லும் தனியார் பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சமயபுரம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர்.
இந்நிலையில் பள்ளி வாகனத்தின் பின்புறம் உள்ள கண்ணாடி உடைந்த நிலையில் அட்டைப்பெட்டியை கயிற்றால் கட்டி அப்பகுதியை மறைத்து மாணவர்களை அழைத்துச் சென்றனர்.
இதற்கு வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகள் பேருந்துகளை முறையாக சோதனை செய்யாததே காரணம் என பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.