திண்டுக்கல் மாவட்டத்தில் பட்டா மாறுதலுக்கு லஞ்சம் பெற்ற நில அளவையர் உட்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஆர்.எம்.காலனி பகுதியை சேர்ந்த கணேஷ்குமார் பட்டா மாறுதல் கோரி மேற்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் பணியாற்றிவரும் சர்வேயர் பாக்கியராஜ்- யை அணுகியுள்ளார்.
அப்போது பாக்கியராஜ் தனது உதவியாளர் சதீஷ் மூலம் 15 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத்துறையினரிடம் கணேஷ்குமார் புகாரளித்த நிலையில், ரசாயனம் தடவிய பணத்தை சதீஷிடம் கொடுக்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தினர்.
அதன்பேரில் கணேஷ்குமாரிடம் இருந்து சதீஷ் பணத்தை பெற்றபோது அதிகாரிகள் அவரை கைது செய்தனர். மேலும் சர்வேயர் பாக்கியராஜையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.