திருச்சி மாவட்டம் லால்குடி அருகே அரசுப் பேருந்தில் இருந்து தவறிவிழுந்த பள்ளி மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அந்தோணியார் கோயில் தெருவை சேர்ந்த அலெக்ஸ் என்பவரின் மகள் பிரதிக்ஷா, அருகிலுள்ள அரசுப் பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வந்தார்.
இந்நிலையில் அரசுப் பேருந்தில் ஏறிய அவர் கூட்டம் காரணமாக பேருந்தில் இருந்து நிலை தடுமாறி கீழே விழுந்தார்.
இதில் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்றுவந்த மாணவி பிரதிக்ஷா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.