விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிடாததால், திமுகவை வீழ்த்த அதிமுகவினர் பாமகவிற்கு வாக்களிக்க வேண்டும் என்று அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதியில் ஜூலை 10ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்நிலையில், சாணிமேடு கிராமத்தில் பாமக வேட்பாளர் சி. அன்புமணியை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது வாக்காளர்கள் மத்தியில் பேசிய அவர், எவ்வளவு பணம் மூட்டைகள் வைத்திருந்தாலும் இடைத்தேர்தலில் திமுக வெற்றி பெறாது என்றார்.
உரிமைகளுக்காக நடைபெறுகிற இந்த தேர்தலில் நிச்சயமாக பாமக வெற்றி பெறும் என்றும், கட்சியை பார்க்காமல் சமூக நீதி கிடைக்க மக்கள் வாக்களிக்க வேண்டும் எனவும் அன்புமணி ராமதாஸ் கேட்டுக்கொண்டார்.